districts

குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை, மே 13- குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006இன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் சட்டப்படி குற்ற மாகும். குழந்தை திருமண தடுப்புச் சட்டம்  2006இன் படி குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டு பவர்கள், துணை போகிறவர்கள், ஆதரிப்ப வர்கள் மற்றும் மறைப்பவருக்கு 2 ஆண்டு கள் வரை கடுங்காவல் தண்டனையும் 1 லட்சம்  ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். அட்ஷயதிருதியை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் திருமணம் அதிகமாக  நடைபெறுவதால், வருகின்ற 14ஆம் தேதி  அட்ஷயதிருதியை முன்னிட்டு திருமணம் நடைபெறா வண்ணம் தடுத்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதி களில் ஏதேனும் குழந்தைகள் திருமணம் நடை பெற உள்ளது பற்றிய தகவல் கிடைத்தால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், காவல் துறை,  முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர நீதிபதி, குழந்தைகள் நல குழுமம், குழந்தைகள் வழியம் (தொலைபேசி எண்: 1098), ஊராட்சி  அளவிலான கண்காணிப்பு குழு ஆகியோ ருக்கு தகவல் அளிக்கவும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;