districts

சென்னை முக்கிய செய்திகள்

தபால் நிலையத்தில்  7 ஊழியர்களுக்கு கொரோனா

கிருஷ்ணகிரி, ஏப்.28 - ஓசூர் எம்.ஜி. சாலையில் உள்ள தலைமை தபால் நிலை யத்தில் ஒரே நாளில் 7 ஊழியர்களுக்கு கொரானா தொற்று பாதித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப்.27 அன்று 426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தேன்கனிக்  கோட்டை வட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை  தலைவர் ஜாகிர் உசேன் கொரோனா தொற்றால் உயிரி ழந்தார்.

பயணிகள் இல்லாததால் 50 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 50 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் செல்லும்  5 விமானங்கள், புதுடெல்லி செல்லும் 3 விமானங்கள், கோவை 3 விமானங்கள், பெங்களூரு 3 விமானங்கள், மும்பை  2 விமானங்கள் மற்றும் மதுரை, கொல்கத்தா, கொச்சி, ராஞ்சி,  அகமதாபாத், சிலிகுரி, இந்தூர், அந்தமான், கோவா உள்ளிட்ட 25 நகரங்களுக்கு புறப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மேற்கண்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வரும் 25 விமானங்களும் ரத்து செய்யப்  பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலை யத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர், கோலாலம்பூர் செல்ல வேண்டிய சிறப்பு விமா னங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிமுக பகுதிச் செயலாளர் மீது வழக்கு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பொறி யாளராக பணியாற்றி வருபவர் வைத்திலிங்கம். ஆவடி நகர  அதிமுக பகுதிச் செயலாளர் ஆர்.சி. தீனதயாளன் என்பவர்  மற்றும் சிலரோடு வந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளுக்கான பணி ஆணையை வழங்க கோரி மிரட்டியுள்ளார். மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல், தகாத  வார்த்தையில் பேசியதோடு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆயைர்,  அதி முக பகுதிச் செயலாளர் மீது ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பால் கடையில் கொள்ளை:  எஸ்ஐ மகன் கைது

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் காந்திபுரம் பகுதியில் பால் மற்றும் பால் பொருள் கடையின் பூட்டை  உடைத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருமுல்லைவாயில் காவல் குடியிருப்பில் வசிக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர் மகன் அபி மற்றும் ஹரிதாஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிமனித இடைவெளியின்றி முகவர்களுக்கு பரிசோதனை

தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக செல்லும் அரசி யல் கட்சி முகவர்களுக்கு நடைபெற்ற கொரோனா சோதனை  முகாமில் தனிமனித இடைவெளியின்றி குவிந்தனர். சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மே 2  அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை ஆவடி யில் நடைபெற்றது. ஆவடி தொகுதி முகவர்களுக்கு மாநக ராட்சி ஏற்பாடு செய்த முகாமில் தனிமனித இடைவெளி யின்றி பங்கேற்றனர்.
 

;