கிருஷ்ணகிரி,ஆக .16 - கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மிடுகரப்பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 36 ஆம் ஆண்டு பகத்சிங் நினைவு கபடி போட்டி-கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் நாகேஷ்பாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டச் செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற கபடி போட்டியை மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாந கராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் அதிமுக வாசுதேவன், 37 வது வார்டு உறுப்பினர் திமுக சென்னீரப்பா, 44 வது வார்டு உறுப்பினர் மஞ்சுளா முனிராஜ் ஆகியோர் கபடி போட்டியை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த 30 கபடி குழுக்கள் பங்கேற்றன. இதில் அஞ்செட்டி எஸ்கே பிரதர்ஸ் அணிக்கு முதல் இடத்தை பிடித்தது. அந்த அணிக்கு எம்.ஜி. வசந்தகுமார் ரூ. 20 ஆயிரத்திற்கு பரிசு தொகை மற்றும் கோப்பையை வழங்கினார். இரண்டாவது இடத்தை பிடித்த ஆனைக்கல் எஸ்பிகேசி அணிக்கு திமுக நிர்வாகி திம்மராஜ் ரூ. 15 ஆயிரமும், மூன்றா வது இடம் பிடித்த ராஜேந்திரா பிரதர்ஸ் ஹெச்.செட்டிபள்ளி அணிக்கு பாரதி ரூ.10 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த பெங்களூரு என்கேசி பிரதர்ஸ் அணிக்கு ராதாகிருஷ்ணன் ரூ. 5 ஆயிரம் பரிசு தொகை களை வழங்கினர். பரிசளிப்பு விழாவுக்கு வாலிபர் சங்க கிளை செயலாளர் உதய்பாரதி தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் இளவர சன் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், கிளைத் தலைவர் முரளி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக குழந் தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.