districts

img

திருக்கோவிலூர் தொகுதிக்கு வாக்குப்பெட்டி

விழுப்புரம், மார்ச் 9- திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தலையொட்டி வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், அரசு சேமிப்புக் கிடங்கில் இருந்து,  திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் அனுப்பும் பணி மாவட்ட தேர்தல் அலு வலரும்,மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் 9ஆம் தேதி  நடைபெற்றது. அப்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.