கள்ளக்குறிச்சி, அக்.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூர் வட்ட 15வது மாநாடு என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி, எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் நினைவரங்கில் அக்.16 அன்று நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை ஆர். அம்பாயிரம் ஏற்றி வைத்தார். எஸ்.பி.கண்ணன் வரவேற்றார். கே.விஜயகுமார் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை வட்டக்குழு செயலாளர் மு.சிவக்குமார் சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கை அறிக்கையை ஆ.ரமேஷ் தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ப.சின்னராசு வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன் நிறை உரையாற்றினார். புதிய வட்டக்குழு 8 பேர் கொண்ட வட்டக் குழுவிற்கு செயலாளராக எம்.ஏழுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீர்மானங்கள் அரகண்டநல்லூர் தரைப்பாலத்தை சீர் செய்ய வேண்டும், காந்தி திருமண மண்டபத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், சந்தைப்பேட்டை மேமாளூர் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.