districts

img

ஐசிஎப் பணியில் பணி நிறைவு பாராட்டு...

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார் 41 ஆண்டு பணி நிறைவு பாராட்டு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நிர்மல் உயர்நிலை பள்ளி வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனிடம், கிருஷ்ணகுமார்  வழங்கினார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்ட செயலாளர் சி.திருவேட்டை மற்றும் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.