districts

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான திறன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியர்

சென்னை, மே 29- கொரோனா முன்களப் பணியாளார்க ளுக்கான திறன் பயிற்சி, தமிழ்நாடு திறன்  மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வா கம் சார்பாக, சென்னை மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்திட, திறன் பயிற்சி மையங்கள் மு்லம் தகுதி யுடைய இளைஞர்களுக்கு பி.எம்.கே.வி.ஒய் 3.0 திட்டத்தின் கீழ் கீழ்காணும் 06 பிரிவு களின் திறன் பயிற்சிகள் சிறந்த முறையில் வழங்கப்பட உள்ளன. 1) அவசர மருத்துவ நுட்பம் - அடிப் படை (Emergency Medical Technician – Basic) 2) பொது பணி உதவியாளர் (General Duty Assistant (GDA)) 3) மேம்பட்ட பொது பணி உதவியாளர் (சிக்கலான பராமரிப்பு) (GDA-Advanced (Critical Care)) 4) வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) 5) மருத்துவ உபகரணங்கள் தொழில் நுட்ப உதவியாளர் (Medical Equipment Technology Assistant) 6) ஃபிளெபோடோமிஸ்ட் (ரத்த மாதிரி எடுப்பவர்) (Phlebotomist) மேற்காணும் திறன் பயிற்சிகளுக்கு கட்ட ணம் ஏதுமில்லை மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்கு மேல் படித்து முடித்தவர்கள் இப்பயிற்சியில் சேர தகுதியுடையர்கள் ஆவர். விருப்பம் மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ricentrenorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்கு நர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), சென்னை-21 என்கிற முக வரியில் அணுகலாம். தொலைபேசி எண்: 044-25201163, செல்போன் எண்: 9080527737, 8778452515. இந்த தகவலை சென்னை மாவட்ட ஆட்சி யர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

;