districts

img

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ன்னை, ஜூன் 6-  

    சவீதா பல் மருத்துவ கல்லூரியின் பொது சுகா தார பல் மருத்துவத் துறை, கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட (என்எஸ்எஸ்)  பிரிவு மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சென்னை கிளை சார்பில் ‘உலக புகையிலை இல்லா தினம்’ சமீபத்தில் கடை பிடிக்கப்பட்டது.  

     உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட, “உணவு பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்; புகையிலை அல்ல” என்ற இந்த ஆண்டிற்கான கருப்பொருளை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடந்த “புகை யிலையை விடுங்கள்” என்னும் கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் ஏராளமானபேர் பங்கேற்றனர். புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்துடன் இணைந்து இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சென்னை கிளை இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.