districts

கடலூரில் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி

கடலூர், மே 12- கடலூர் மாவட்டத்தில் 7 தனி யார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி யுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோ னாவின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் அரசு மருத்துவமனைகள், ராஜா முத்  தையா அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளில் மட்டுமே  கொரோனாவிற்கு சிகிச்சையளிக் கப்பட்டு வருகிறது. 11 மையங்கள் தனி மைப்படுத்தும் முகாமாக மாற்றப் பட்டு அங்கு கொரோனா சிகிச் சைக்கு முந்தைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் அவர்களுக்கு பிராண வாயு தேவைப்படுகிறது. பிராண வாயுவுடன் கூடிய படுக்கை வசதி கள் மாவட்டத்தில் 320 மட்டுமே இருப்பில் உள்ளது. அவைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால், கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு உரிய அனு மதி பெற்றால் மட்டுமே சிகிச்சை யளிக்க முடியும் என்ற நிலையில்  மாவட்டத்தில் 7 தனியார் மருத்துவ மனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, கடலூரில் கிருஷ்ணா  மருத்துவமனை, கல்யாண் மருத்துவ மனை, கடலூர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லட்சுமி மருத்துவ மனை, கண்ணன் மருத்துவமனை ஆகியவை கடலூரிலும், சிதம்ப ரத்தில் கண்ணன் நர்சிங் ஹோம், விருத்தாசலத்தில் பிபிஎஸ் மெடிக் கல் சென்டர் ஆகியவையும் கொரோனா சிகிச்சையளிக்க அனு மதிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி கேட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்த உடன் அங்கும் கொரோனா சிகிச்சை யளிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

கட்டண நிர்ணயம் இல்லை...

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முதல் அலை பரவலின் போது தமிழக அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. அதே கட்டணமே தற்போதும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு கட்டணம் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறது. எனவே, எந்த மருத்துவமனையில் எவ்வளவு கட்டணம் என்ற விபரத்தினை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;