விழுப்புரம், அக்.29. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், தைலாபுரம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், தைலாபுரம் கிராமத்தில் ஆதி திராவிடர் கிராம மக்களுக்கு குடி தண்ணீரை கலப்படம் இல்லாமல் சுகா தாரமான முறையில் வழங்க வேண்டும், இடிந்துவிழும் நிலையில் உள்ள ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தை யும், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தோட்டி இடிந்துவிழும் முன் சீர் செய்து கொடுக்க வேண்டும், ஆதி திராவிட மக்களுக்கு சுடுகாட்டுக்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும், தைலாபுரத்திலிருந்து ஈச்சங்காடு வரை உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு பொருத்தி கொடுக்க வேண்டும், மாரி யம்மன் கோயில் தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய வற்றை கண்டித்து திருச்சிற்றம்பலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஜி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.அர்ச்சுணன்,எம்.கே.முருகன், வட்ட செயலாளர் எஸ்.பால முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஐ.சேகர்,வி.சுந்தரமூர்த்தி, ஆர்.சேகர்,கே.மாயவன்,ஜெ.முகமது அனாஸ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.