districts

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஆரம்பநிலை சுகாதார மையமாக மாற்ற நடவடிக்கை

சென்னை, மே 11- பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையங்கள் படிப்படியாக கொரோனா சிகிச்சை ஆரம்பநிலை சுகாதார மையமாக மாற்றப்பட உள்ளது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா ளர் ஹர்மந்தர்சிங் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்  கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து மண்டல  ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களு டனான ஆலோசனைக் கூட்டம் நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் தலை மையில் ரிப்பன் மாளிகை கூட்ட ரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாது காப்பு மற்றும் சிகிச்சை குறித்து  புதிய நடைமுறைகளை பின்பற்ற அறி வுறுத்தப்பட்டது. 15 மண்டலங்க ளுக்கும் களப்பணிகளை ஒருங்கி ணைக்க இந்திய ஆட்சிப்பணி அளவி லான அதிகாரிகள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்  துறை அலுவலர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவா னது, மண்டல அலுவலர்கள், மண்டல  நல அலுவலர்கள் மற்றும் இதர மாந கராட்சி அலுவலர்களுடன் ஒருங்கி ணைந்து புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனா வைரஸ்  தொற்று கண்டறியும் தடவல் பரி சோதனை (ஆர்.டி.பிசிஆர்) மேற்  கொண்டு சோதனை முடிவு வருவ தற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நப ருக்கு ஜிங்க், விட்டமின் மாத்திரை கள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்ற டுக்கு முகக்கவசங்கள் அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு தொற்று பாதிப்பு இருப்பின் அவரது உடல்நிலை சுகவீனம் அடை வதை தவிர்க்க முடியும், கொரோனா  தொற்று பரிசோதனை மேற் கொள்ள சென்னையில் 59 ஆய்வ கங்கள் உள்ளன. பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கான முடிவுகள் இதுநாள்வரை சம் பந்தப்பட்ட ஆய்வகங்களின் மூலம்  நேரடியாக வழங்கப்பட் வந்தது. பரி சோதனை முடிவுகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் இனிவரும் காலங்களில் அனைத்து ஆய்வகங்களும் தொற்று  பரிசோதனை மேற்கொண்ட நபர்க ளின் முடிவுகளை பெருநகர சென்னை  மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையி டம் வழங்க வேண்டும். இந்தப் பரி சோதனை முடிவுகளை பெற ஒவ் வொரு மண்டலத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு சம்பந்  தப்பட்ட மாநகராட்சி மருத்துவக் குழு வின் வாயிலாக மட்டுமே பரி சோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகள் பெறப் பட்டு தொற்று பாதித்த நபர்களின் வயது, உடல் சார்ந்த இணை நோய்  கள், சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற பல்வேறு முதற்கட்ட சோத னைகளை மருத்துவர்களின் மேற்  பார்வையில் மாநகராட்சி சுகாதாரக்  குழுவானது அவர்களின் வீடு களுக்கே சென்று பரிசோதித்து தொற்று பாதிப்பு குறைந்த அளவே  இருப்பின் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். எக்ஸ்ரே, இரத்தப் பரி சோதனை உட்பட முதற்கட்ட பரி சோதனை மேற்கொள்ள வேண்டிய நபர்களை மாநகராட்சி முதற்கட்ட உடல்நிலை பரிசோதனை மையத்  திற்கு அழைத்து சென்று தேவை யான பரிசோதனைகளை மேற் கொண்டு மருத்துவர்களின் ஆலோ சனைப்படி, அவர்களை வீடுகளி லேயே தனிமைப்படுத்துதல் அல்லது  கொரோனா பாதுகாப்பு மையத்தில்  தனிமைப்படுத்துதல் அல்லது மருத்து வமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தல் என உடனடியாக வகைப்  படுத்தி சிகிச்சை வழங்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சி தலை மையிடத்தில் ஏற்கனவே 100 தொலை பேசி இணைப்புகளுடன் கொரோனா  வைரஸ் தொற்று பாதித்த நபர்க ளுக்கு ஆலோசனை வழங்க மனநல  ஆலோசனை மையம் செயல்பட்டு  வருகிறது. மேலும், 15 மண்டலங்களி லும் தொற்று பாதித்து வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டுள்ள நோயாளி களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோ சனைகள் மற்றும் மன அழுத்தத்தில்  இருந்து விடுபட மனநல ஆலோசனை கள் வழங்க ஒரு மண்டலத்திற்கு 6  நபர்கள் என சுழற்சி முறையில்  பணியில் ஈடுபட 15 மண்டலங்களுக் கும் மருத்துவம் முடித்த பயிற்சி மருத்துவர்களை ஒப்பந்த அடிப்ப டையில் உடனடியாக நியமிக்க வேண்டும். அவர்கள் தங்கள் மண்ட லங்களுக்குட்பட்ட பகுதிகளில் நோய்  தொற்று பாதித்த நபர்களுக்கு காலை, மாலை என நாள்தோறும் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து மருத்துவ ஆலோசனை களை வழங்க வேண்டும். இது தொடர்  பான விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தற்பொழுது கொரோனா தொற்றால் பாதித்த நபர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை அதிக ரித்துள்ளதால், அனைத்து கொரோனா பாதுகாப்பு மையங்க ளும் படிப்படியாக ஆக்சிஜன் வசதி யுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆரம்ப நிலை சுகாதார மையமாக மாற்றவும், அங்கு சிகிச்சைகளை கண்காணிக்க போதிய அளவு எண்ணிக்கையிலான மருத்துவ அலுவலர்களையும் நியமிக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட புதிய நடைமுறை களை நாளை முதல் அனைத்து  மண்டலங்களிலும் நடைமுறைப்ப டுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. இதில் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, காவல் துறை தலைவர் எச்.எம்.ஜெய ராம், இணை ஆணையாளர் (கல்வி)  சங்கர்லால் குமாவாத் உள்ளிட்ட அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;