சென்னை,பிப்.10- ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளி சென்னையில் ‘இமேஜின் ஹப்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் உள்ள அதிநவீன - ஆய்வுக் கூடங்களை நடன இயக்குநர்களான ஸ்ரீதர் மாஸ்டர், அக்ஷதா ஸ்ரீதர், ஒளிப்பதிவாளர் வித்து அய்யன்னா, படத்தொகுப்பா ளர் ஷபீக் முகமது அலி, ஐசிசிஆர் சென்னையின் முன்னாள் மண்டல இயக்குநர்- கே. முகமது இப்ராஹிம் கலீல், பள்ளி முதல்வர் - லாவண்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இமேஜின் ஹப் ஆய்வகத்தில் வானியல், ரோபாட்டிக்ஸ், ஏம்ஏசி கோடிங், டிங்கரிங் (தன்னாற்றல் சுயகல்வி), நடனம், நாடகம், இசை, நெசவு மற்றும் அச்சிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் ஓவியம் வரைதல் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆர்க்கிட்ஸ் பள்ளிக்கரணை வளாகத்தி லும் இந்த ஆய்வகக் கூடங்கள் அமையப் பெற்றுள்ளன.