districts

சென்னை முக்கிய செய்திகள்

கைத்திறனை வெளிப்படுத்தும்  திருவிழா

சென்னை, செப். 24-  கைவினை கலைஞர்க ளின் திறமையை வெளிப் படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜெய்பூரில் “கம்பள  திருவிழா  நடத்தப்படுகிறது. கம்பள உற்பத்தியில் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் ரக்ஸ்  ஆதரவோடு நடத்தப்படும் இந்த கண்காட்சி மற்றும் திரு விழா  வணிகத்திற்கு அப்பாற் பட்ட ஒரு கொண்டாட்ட மாகும். கிராமப்புற இந்திய கைவினைஞர்களின் கலைத் திறனை உலகத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த  திருவிழா ஒரு மாதம் நடை பெற உள்ளது. கடந்த ஆண்டு நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜெய்ப்பூர் ரக்ஸ் ஸ்டோர்களிலும் 15 கோடி ரூபாய்க்கு தரை விரிப்புகள் மற்றும் கம்பளங்கள் விற்ப னையாகி சாதனைபடைத் தது.

புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம்

சென்னை,செப்.24-  சென்னை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  வள்ளுவர்  கோட்டம் ரூ.80  கோடி மதிப்பீட்டில் புதுப் பிக்கப்பட் வருகிறது. இந்த  பணிகளை ஆய்வு செய்த  தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை  அமைச்சர்  சாமிநாதன் பணிகள் அனைத்தும் வரும் ஜனவரி  மாதத்திற்குள் முடிக்கப் படும் என்றார். புதுப்பிக்கப் பட்டவுடன் வள்ளுவர்  கோட்டம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் என்றும் அவர் கூறினார். தங்கம் விலை  1 கிராம் ரூ.7000 சென்னை,செப்.24- சென்னையில் செவ்வா யன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவர னுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படு கிறது.

விமான நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு  தடை

சென்னை,செப்.24- சென்னை விமான நிலைய வளாகத்தில்  இரு சக்கர  வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மல்டி லெவல் பார்க்கிங் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டில் விமான நிலைய நிர்வாகம் உள்ளதாகவும் தனியார் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகளை விமான நிலையம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது என பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். விமான நிலையத்தின் செயல்பாடு சரியானது அல்ல என்றும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.