districts

சென்னை பெட்ரோலியம் கழகம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் சாதனை

சென்னை, ஏப்.26 சென்னை பெட்ரோலியம் இது வரை எந்த அண்டும் இல்லாத அளவில் இதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி அளவை தாண்டி 111 விழுக்காடு உற்பத்தி திறனில் செயல்பட்டு குரூட் ஆயில் சுத்தி கரிப்பு செய்து சாதனை படைத்துள் ளது. இதன் வருவாய் கடந்த  ஆண்டைக் காட்டிலும் உயர்ந்துள் ளது. இதன் மொத்த லாபம் 2023- 24 ஆண்டில் ரூ. 2745 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குதாரர்களுக்கு அதிகபட்சமாக 550 விழுக்காடு டிவிடெண்ட் வழங்குகிறது. பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 2022-23ம் நிதி யாண்டில் முந்தைய உற்பத்தி திறனை 11.32 மில்லியன் டன்னை விட 11.64 மில்லியன் டன் சுத்திகரித்து  சாதனை புரிந்துள்ளது. இதன் நிறு வப்பட்ட திறனில் 111 விழுக் காடு என்ற மிக உயர்ந்த கச்சா உற்பத்தியை அடைந்தது. இந்த ஆண்டில் பதிவு  செய்யப்பட்ட மிகக்குறைந்த எரி பொருள் பயன்பாடு, உகந்த ஆற்றல்,  பயன்பாட்டை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் 2023-24ஆம்  நிதியாண்டிற்கான செயல்பாடு களின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.90 ஆயிரத்து 908 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.79 ஆயிரத்து 272  கோடியாக உள்ளது. செயல்பாடு களின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 21 ஆயிரத்து 350 கோடியிலிருந்து 2023 24ம் காலாண்டில் ரூ. 20 ஆயிரத்து 823 கோடியாக உள்ளது. சர்வதேச சந்தைகளில் குறைந்த தயாரிப்பு விலை காரணமாக இதன் குறைப்பு முக்கியமாக உள்ளது. 2023 24ம் நிதியாண்டில் வெளி யிடப்பட்ட நிகர லாபம் ரூ. 2 ஆயி ரத்து 711 கோடியின் அடிப்படையில், 2023-24ம் நிதி யாண்டில் இந்நிறுவனம் 2023-24ம் நிதியாண்டில் ஒரு ஈக்விட்டிப் பங்குக்கு ரூ.55 (அதாவது ஒரு ஈக்விட்டி பங்கின் முக மதிப்புல் 550விழுக்காடு) ரூ.55ஐப் பரிந்துரைத்துள்ளது. 2023-24ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1004 கோடியாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் ரூ.612 கோடியாகும். மார்ச் 24ந் தேதியுடன் முடி வடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான வரிக்குப் பிந்தய  ஒருங்கிணைந்த லாபம் ரூ.628  கோடி மற்றும் ரூ.2745 கோடி களாகும்.