விழுப்புரம்,டிச.9- விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ளது. இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக உள்ளது. மரக்காணம் பகுதி விவசாயிகள் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் கதிர்வந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் முழ்கினர்.