சென்னை,மார்ச் 15- முஸ்லீம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொ குதி எம்.பி. மற்றும் தற்போது அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுபவர் நவாஸ் கனி. இவருக்குச் சொந்தமான- சென்னையிலுள்ள எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை வியாழனன்று சோதனை நடத்தியது. இந்த சோதனை வெள்ளிக்கிழமையன்றும் 2ஆம் நாளாக தொடர்ந்தது. எஸ்.டி. கூரியர்ஸ், தனது அண்ணலார் கல்வி அறக்கட்டளையின் மூலம், படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக் கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களு க்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை ழங்குவதோடு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை யும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.