திருவொற்றியூர் மண்டலம் கார்கில் நகரில் உள்ள 14 உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு உறுப்பினர் அருமைராஜ், கிளைச் செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் 7ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக்கிடம் மனு அளித்தனர்.