districts

img

அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடுக

 சேலம், ஆக 18- அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சேலம்  மாவட்ட 17ஆவது மாநாடு வலியுறுத் தியுள்ளது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  சேலம் மாவட்ட மாநாடு அயோத்திய பட்டணம் பகுதியில் சூர்யா நுழை வாயில், அசோக் நினைவரங்கத்தில் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கந்தசாமி கொடியேற்றி வைத்தார். வரவேற்புக் குழு தலைவர் வி.தங்கவேல் வரவேற்புரையாற்றினார்.  மாவட்ட  துணைச் செயலாளர் பெரியசாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார்.  மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் துவக்கி  வைத்தார். மாவட்ட செயலாளர் வி. வெங்கடேஷ், வேலை அறிக்கை யும், மாவட்ட பொருளாளர் வி.  ஜெகநாதன் வரவு செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். வாலிபர் சங்க  மாநில துணைத்தலைவர் மணி கண்டன், மாநில குழு உறுப்பினர்  எம்.ஜீவா ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர்.  அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அரசு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை  கைவிட வேண்டும். சேலம் உருக்காலையை விரிவு படுத்திட வேண்டும்.  வெள்ளி தொழிலை பாதுகாத்திட, வெள்ளி கச்சா பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து நீக்கிட வேண்டும். வெள்ளி பட்டறை தொழி லாளர்களுக்கு தனி நல வாரியம்  அமைத்திட வேண்டும்  உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநிலத் தலைவர் என். ரெஜிஷ்  குமார் நிறைவுறையாற்றினார்.  முடிவில், வரவேற்புக்குழு பொரு ளாளர் எம்.சத்தியகாந்த் நன்றி கூறினார்.   புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக வி.ஜெக நாதன், மாவட்ட செயலாளராக வி. பெரியசாமி, மாவட்ட பொருளாள ராக எம்.வெற்றிவேல், துணைத்  தலைவர்களாக குரு பிரசன்னா, திவ்யா, பிரபு, துணைச் செயலாளர் களாக ராமச்சந்திரன், சத்தியகாந்த்,  தர்மலிங்கம் உள்ளிட்டு 26 பேர்  கொண்ட புதிய மாவட்ட குழு உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   அதனைத்தொடர்ந்து அயோத்தி யாபட்டிணம் ரயில்வே கேட் அருகில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.

;