districts

img

லாபம் பெற முடியாமல் தவிக்கும் “இலை வாழை” விவசாயிகள்!

கோவை மாவட்டம், தொண்டா முத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளை யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பரவலாக செய் யப்படுகிறது. குறிப்பாக, தொண்டா முத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகு திகளில் “இலை வாழை” விவசாயம் பெருமளவும் செய்யப்படுகிறது. கோவையில் இருந்து வாழை இலைகள் உள்ளூர் மட்டுமின்றி  பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக பண் டிகை விஷேச காலங்களில் வாழை  இலை விற்பனை வெகு ஜோராகவே  நடந்து வருகிறது. முகூர்த்த நாட்க ளில் விற்பனை பன் மடங்காக நடை பெறும், மேலும் இலையின் விலை யும் அதிகளவு உயர்கிறது. கடந்த ஆவணி மாதம் முகூர்த்த நாட்களை  தொடர்ந்து, ஓணம், ஆயுத பூஜை, கார்த்திகை மாதம் உள்ளிட்ட நாட்க ளில் வாழை இலை விலை கடுமை யாக உயர்ந்தது. விலை உயர்ந்தா லும் விவசாயிகளுக்கு எந்த லாப மும் இல்லை என அவர்கள் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர்.  இலை வாழை விவசாயம் 6 மாத  சாகுபடியாக நடைபெற்று வருகிறது.  வாழை கன்று தலா ரூ.15 க்கு வாங் கப்பட்டு பயிரியிடப்படுவதில் இருந்து உரம், பாத்தி, பராமரிப்பு என தொடர்ந்து செலவுகள் செய்து  வளர்க்கப்படுகிறது. மேலும் வியாபா ரிகள் ஒவ்வொரு விவசாயிகளிடமும்  ஒப்பந்த அடிப்படையில் வியாபாரத் திற்காக விலை பேசுகின்றனர். ஒரு கட்டு வாழை இலைக்கு ரூ.450 முதல்  ஏற்றம், இறக்கமாக விலை நிர்ணயம்  செய்யப்படுகிறது. சந்தைகளில் விலை அதிகம் இருக்கும் போது  வியாபாரிகள் நல்ல லாபம் பார்தா லும், அவை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அதே வேலை யில் ஆடி, புரட்டாசி, மாதங்களில் விலை கடுமையாக குறையும் போது  இலைக்கான பணம் கொடுப்பதில் தாமதம், இடைவெளி விட்டு இலை  எடுக்க வருவதால், இலைகளில் ஏற் படும் சேதம் மற்றும் மழை, காற் றால் வாழை இலைகள் பாதிப்படை யும் போது விவசாயிகள் நஷ்டத்தை  எதிர்கொள்கின்றனர். இதனால் விவ சாயம் செய்தாலும் விவசாயிகளுக்கு  லாபம் இல்லை. வரும் வருவாயில்  மீண்டும் அடுத்த சாகுபடிக்கான முத லீடு செய்ய வேண்டி உள்ளதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர். முகூர்த்த நாட்களில் இலை வாழைக ளின் விலை உயரும் போது விவசாயி களுக்கு லாபம் கிடைக்க வழிவகை  செய்ய வேண்டும் என்பதே இலை  வாழை விவசாயிகளின் எதிர்பார்ப் பாக உள்ளது. ஐப்பசி மாதம் துவங் கியுள்ளதால் வாழை இலைகளின் தேவை அதிகமாக இருக்கும், மீண் டும் வாழை இலை விலை உயரும்  நிலை உள்ளதால், இம்முறையாவது  விவசாயிகளுக்கான லாபம் கிடைக் கும் என்ற எதிர்ப்பார்ப்பில் “இலை  வாழை” விவசாயிகள் காத்திருக்கின் றன (ந.நி)