districts

img

தெரு நாய்களின் தாக்குதலில் படுகாயமடைந்த மயிலின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்

மே.பாளையம், மே 18-

தெரு நாய்களின் தாக்கு தலில் படுகாயமடைந்த, மயிலின் உயிரை காப்பாற் றிய இளைஞர்கள், சிகிச்சை யளித்து மயிலை வனப் பகுதியில் விட்டனர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் தெரு நாய் கள் கடித்ததால் உயிருக்கு போராடிய ஆண் மயிலை மீட்டு உரிய நேரத்தில் சிகிச் சையளித்து அதன் உயிரை காப்பாற்றியுள்ள னர் இரு இளைஞர்கள். மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை,  கரடி, காட்டெருதுகள் என பல்வேறு விலங்கி னங்கள் இருந்தாலும் மான் மற்றும் மயில்க ளின் எண்ணிக்கை அதிகம். கோடை காலங்க ளில் உணவு மற்றும் நீரை தேடி பெரிய விலங் கினங்கள் நீண்ட தூரம் பயணித்து தங்களது தேவையை பூர்த்தி செய்யும் நிலையில் மான், மயில் போன்றவை காட்டை ஒட்டியுள்ள பகுதி களில் சுற்றித்திரியும். தண்ணீர் தேங்கும் இடங் களுக்கு வந்து தாகம் தணிக்கும்.

இது போன்ற சூழலில் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் இவற்றை விரட்டி கடித்து காயப்படுத்தி விடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வரு கின்றன. பல சந்தர்பங்களில் புள்ளி மான்கள் நாய்க்கடிக்கு பலியாகியுள்ளன. இந்நிலை யில், மேட்டுப்பாளையத்தில் உள்ள மாதேஸ் வரன் மலையடிவாரத்தில் நீண்ட தோகை யுடன் கூடிய ஆண் மயிலோன்றை தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தி கொண்டிருந் ததை அவ்வழியே சென்ற கண்ணன் மற்றும் செல்வம் என்ற இரு இளைஞர்கள் கண்டுள் ளனர். உடனடியாக ஓடி சென்ற இருவரும் நாய்களை விரட்டியடித்து மயிலை காப்பாற்றி யுள்ளனர்.  ஆனால் மயிலின் இடதுபுற வயிற்று பகுதி யில் நாய்கள் கடித்ததில் ஆழமான காயம் இருந்ததால் அதனால் நடக்கவோ பறக்கவோ இயலாமல் அங்கேயே படுத்தபடி உயிருக்கு போராடியது. இதனை கண்டு பரிதாப மடைந்த இருவரும் தங்களது இரு சக்கர வாக னத்தில் மயிலை தூக்கி கொண்டு உடன டியாக மேட்டுப்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மயிலின் காயத்திற்கு மருந்துகள் போடப்பட்டு மயிலின் உடலில் ஊசியும் செலுத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரத்தில் மயில் எழுந்து நிற்க துவங் கியது. இதனையடுத்து மயிலை மேட்டுப்பாளை யம் வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளை ஞர்கள் அவர்களின் ஒப்புதலோடு மேட்டுப் பாளையம் அரசு மரக்கிடங்கு பின்புறமுள்ள வனப்பகுதியில் மயிலை விடுவித்தனர். தேசிய பறவையான மயிலின் உயிரை காப் பாற்ற இளைஞர்கள் எடுத்த முயற்சி அனை வராலும் பாராட்டை பெற்றுள்ளது.

;