districts

img

கோவை நகரத்தை பசுமையாக்கும் தொழிலாளர்கள்..!

கோவை காந்திபுரம் பகுதியில்  சாலையோரங்களில் மரக்கன்று களை நடவு செய்து நகரை பசுமை யாக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளனர் கோவையை சேர்ந்த தொழிலாளர்கள்.  சிறு,குறு தொழில்கள் நிறைந்துள்ள மாவட்டமாகவும், நாள்தோறும் பல்லாயிரக்கணக் கானோர் வந்து செல்கிற நகரமா கவும் கோவை காந்திபுரம் உள்ளது.  எப்போதுமே பரபரப்பாக உள்ள  காந்திபுரத்தில் இருந்து வெளி மாவட்டங்களும், அண்டை  மாநிலங்களுக்கும், கோவையின்  பெரும்பாலன பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து வசதிகள்  உள்ளன. இங்கு, அனைத்து வித மான பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் உள்ளன. நகரின் இதயம் காந்தி புரம் என்றால் அது மிகையல்ல. நகரமயமாக்கப்பட்ட இப்பகுதி முழுவதும் வானோங்கிய கட்டி டங்கள் முளைத்துள்ளன. ஆனால்  பெயரளவிற்குக்கூட பச்சை போர்த்திய மரங்கள், செடிகள் பார்க்க முடியாததாக உள்ளது. இதனை, மாற்றும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்  உழைப்பாளிகள். குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள், பாரம் தூக்கும் தொழிலாளிகள் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதி யில் பசுமையை பாதுகாக்க புறப் பட்டிருக்கின்றனர். காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த  ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் மற்றும்  அதேபகுதியில் பாரம் தூக்கும் வேலை செய்து வரும் சவுந்தர்ராஜ்  ஆகிய இருவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் கிராஸ்கட் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரித்து வந்துள்ளனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி  இவர்கள் சமூகத்தின் மீது அக் கறை காரணமாக அப்பகுதியை சேர்ந்த மற்ற தொழிலாளர்களும் இவர்களுடன் சேர்ந்த மரக்கன்று களை நடவு செய்ய துவங்கினர். இவர்கள் இணைந்து “பசுமை தொடர்ச்சி” என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, இந்த  பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இதுவரை நாவல், புங்கன்,  பாதாம், மூங்கில் உட்பட பல்வேறு  விதமான மரக்கன்றுகளை காந்தி புரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடவு செய்துள்ளனர். தற்போது வரை 285 மரக்கன்றுகளை நடவு செய்துள்ள இந்த குழுவினர், வாரந் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மரங்களுக்கு நீர்பாய்ச்சும் பணியை தொடர்கின்றனர். பிரகாஷ் தனது ஆட்டோவில் டிரம்  ஒன்றை வைத்து அதில் தண்ணீரை நிரப்பி, வழியெங்கும் தான் நடவு செய்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டே செல்கிறார். இவரது குழுவினர் மரங்களை தொடர்ந்து கண்காணித்து அவற்றை பராமரித்து வருகின்ற னர். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் நடவு செய்த மரக்கன்று கள் தற்போது மரமாக மாறி  மக்களுக்கு நிழல் தரத்துவங்கி யுள்ளன. காந்திபுரம் வந்தால் அனைத் தும் கிடைக்கும் என்று கோவை வாசிகளுக்கு தெரியும், இப்படிப் பட்ட மண்ணுக்கு மரங்களும் தேவை என்பதை உணர்த்திய இந்த  தொழிலாளிகள் போற்றுதலுக் குரியவர்கள். -கே.எஸ்.எம்

;