திருப்பூர், ஜூலை 5 – தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை நடத்திய கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வியாழன்று பரிசுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் குரலிசை, கருவியிசை, பரத நாட் டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற் றோருக்கு முதல் பரிசு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.4 ஆயிரத்து 500, மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், கலை மற்றும் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் நீலமேகன் ஆகியோர் பங்கேற்றனர்.