districts

பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து 2600 கன அடியாக அதிகரிப்பு

பொள்ளாச்சி, மே 18-

கோடை மழையால் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக் குளம் அணைக்கு வினாடிக்கு 2600 கன அடி தண்ணீர் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு, சோலையார் அணையில் இருந்தும், மழை பெய்யும் போது நீர் தேக்க பகுதியிலிருந் தும் தண்ணீர் வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், ஜூன் முதல் சில மாதமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்த போது, பரம்பிக் குளம் அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்தில் முழு அடியையும் எட்டியது. இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் இறுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழையில்லாத தால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு  நாள் குறைந்து அதன் நீர்மட்டம் சரிய துவங்கியது.

ஒரு வாரத் திற்கு முன்பு தண்ணீர் வரத்து வினாடிக்கு 80 கன அடியாக மட் டுமே இருந்தது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர் மட் டம் 26 அடியாக சரிந்தது. பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர்  வரத்து மிகவும் குறைவு என்றாலும், கான்டூர் கால்வாய் வழி யாக திருமூர்த்தி அணைகளுக்கு வினாடிக்கு  ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய துவங்கியது.இந்த மழை பகல், இரவு என இடை விடாமல் தொடர்ந்து பெய்ததால் பரம்பிக்குளம் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது.

ஞாயி றன்று இரவு வரை என தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக பெய்த கோடை மழையால், செவ்வாயன்று காலை நிலவரப்படி பரம் பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து 2600 கன அடியாக அதி கரித்தது. தற்போது நீர்மட்டம் 29 அடியாக இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;