districts

img

கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

கோவை மாவட்டத்தில் 30,81,594 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  கிராந்திக்குமார் பாடி அங்கீரிக்கப்பட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  
இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்களும், 15,71,093 பெண்களும், மாற்று பாலினத்தவர்கள் 595 பேர் என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். 
அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 1,96,503 வாக்காளர்களை கொண்ட தொகுதிகளாக உள்ளது.