districts

img

அரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துக

 தருமபுரி, ஆக 18- அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என அனைந்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அரூர் வட்டக்குழு 8 ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அரூர் வட்டக்குழு  8ஆவது மாநாடு  அரூரில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு, லூர்து  தலைமை வகித்தார். தமிழ்செல்வி வரவேற்றார். மாவட்டத்  தலைவர் ஏ.ஜெயா மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டக் குழுச் செயலாளர் தனலட்சுமி, பொருளாளர் சுமதி ஆகி யோர் அறிக்கை முன்வைத்தனர்.  இதில், பெண்களுக்கு பாலியல் வன்முறை, வரதட்சணை  கொடுமை ஆகியவற்றை தடுக்கவேண்டும்.  100 நாள் வேலை  திட்டத்தில் பெண்களுக்கு சட்டபடியான கூலி தொகையை நிலுவை இல்லாமல்  வழங்க வேண்டும். அரூர் அரசு  மருத்துவ மனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  அரூர் வட்டக்குழுத் தலைவராக தனலட்சுமி, செயலாள ராக இந்திராகாந்தி, பொருளாளராக சுமதி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்டத் துணைத்தலைவர் பி.கிருஷ்ண வேணி நிறைவுறையாற்றினார்.

;