districts

img

விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.26ல் கோவை, திருப்பூரில் இருசக்கர, டிராக்டர் பேரணி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டக்குழு அழைப்பு

கோவை, ஜன. 19– விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறுக்கோரி கோவை மற்றும் திருப்பூரில் குடியரசு தின நாளில் இருசக்கர வாகனம், டிராக்டர் பேரணி நடத்த மத்திய தொழிற்சங்கங் கள் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. கோவை ஏஐடியுசி தொழிற்சங்க அலுவலகத்தில் மத்திய தொழிற்சங் கங்களின் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று ஐஎன்டியுசி தலைவர் ரங்க நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி மதியழகன், ஏஐடி யுசி எம்.ஆறுமுகம், சி.தங்கவேல், சிஐ டியு எஸ்.ஆறுமுகம், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, எல்பிஎப் வணங்காமுடி, எச்எம்எஸ் கோவிந்தராஜூலு, எம்எல்எப் சாஜகான் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தலைநகர் தில்லியில் 50 நாட்க ளுக்கு மேலாக விவசாயிகள் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இப்போராட் டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்து வது என விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மத்திய தொழிற்சங்க கூட்ட மைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஜன.22 ஆம் தேதியன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காந்திபூங்கா அருகே கண் டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜன.26 ஆம் தேதியன்று கோவை பார்க்கேட் புதிய மேம்பாலம் பகுதியில் இருந்து பவர்ஹவுஸ் வரையில் தேசிய கொடி யேந்தி இருசக்கர வாகன பேரணி நடத்துவது எனவும் முடிவெடுக்கப் பட்டது. 

திருப்பூர்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட் டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமையில் பல்ல டத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். குமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளர்கள் கெம்கோ பி.ரத்தின சாமி,  எஸ்.எம்‌.பழனிசாமி,  கொமதேக ஏ.பி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயி கள் சங்க (சிபிஐ) மாவட்டத் தலைவர் கே.சின்னசாமி,  மாவட்ட துணைத் தலைவர் ஜி.கே.கேசவன்,  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் ஏ.பாலதண்டபாணி,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.பரம சிவம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட் டப் பொருளாளர் ஆர்.வெங்கட்ரா மன், மாவட்ட துணைத் தலைவர்  எஸ்.கே.கொளந்தைசாமி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை.பழனிசாமி,  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், ஜன.26ஆம் தேதியன்று திருப்பூரில் பல்லடம் சாலை, அருள்பு ரம், தாராபுரம் சாலை கோவில்வழி, அவிநாசி சாலை காந்திநகர், ஊத்துக் குளி சாலை பாளையக்காடு ஆகிய நான்கு முனைகளில் இருந்து தேசிய கொடியேந்தி டிராக்டர் பேரணி மற்றும் இருசக்கர வாகனப் பேரணி புறப் பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய கொடி ஏற்றுவது என முடிவு செய்யப் பட்டது.

;