districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 23– பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, சுரங்கங்கள், நிதித்துறை மற்றும் பாதுகாப்பு உற்பத்தியை துறைகளை தனியா ருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும்,ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அவசரச்சட்டம் பிறப்பித்ததை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 23 ஆம் தேதியன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு மத்தி யத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மற் றும் அகில இந்திய சம்மேளனங்கள் சங்கங்க ளின் கூட்டுக்குழு அறைகூவல் விடுத்திருந் தது.  இதன் ஒருபகுதியாக கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார் பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம்எல்எப் தொழிற்சங்கத்தின் தலைவர் மு. தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் டி.எம். மூர்த்தி பங்கேற்று கண்டன உரையாற்றி னார். இதில் ஏஐடியுசி எம்.ஆறுமுகம், கே. தங்கவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி, எச்எம்எஸ் டி.ராஜமாணி, எஸ்டிடியு ரகு புரிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று  ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர்.

திருப்பூர்

இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் தியாகி குமரன் சிலை முன்பாக அனைத்து தொழிற்சங் கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எச்எம்எஸ் செய லாளர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் என்.சேகர், எல்பிஎப் துணைச்செயலாளர் ரங்கசாமி, எம்எல்எப் நிர்வாகி சம்பத், ஐஎன்டியூசி செய லாளர் சிவசாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் உள்பட அனைத்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.

சேலம்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே யுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் வி.மணி வகித்தார். இதில், சிஐடியு சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஆர். வைரமணி, எ.கோவிந்தன், ஐஎன்டியூசி நிர் வாகிகள் வடமலை, நடராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் முனுசாமி, முருகன்,  எச்எம்எஸ் நிர்வாகிகள் கணேசன், கோவிந் தன், ஏஐசிசிடியூ நிர்வாகி வேல்முருகன், நாக ராஜ் உள்ளிட்டு ஏராளமானோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

தருமபுரி

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார்.இதில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. மணி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பி.எம். சண்முகராஜா ஐஎன்டியுசி மாவட்டதலைவர் வழக்கறிஞர் கே.மோகன், ஏஐசிசிடியு மாவட் டச் செயலாளர் சி.முருகன் எச்எம்எஸ் மாவட் டச் செயலாளர் எம்.அர்சுணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகை எடிசியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய  அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் பேர வைச் செயலாளர்  செல்வராஜ் தலைமை  வகித்தார். இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.ரமேஷ், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் மூர்த்தி,  சிஐடியு மாவட்ட தலைவர் சுந்தரம்,  சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன், எல்பிஎப் ஒன்றிய கவுன்சில் செயலா ளர் ஜெயராமன் மற்றும் உதகை நகராட்சி பணியாளர்கள் சங்கத்தினர், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அர சிற்கு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;