districts

img

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் எக்ஸ்ரே வசதிகளை ஏற்படுத்த சிஐடியு கோரிக்கை

பொள்ளாச்சி, ஜூன் 20- பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே, ரத்தவங்கி உள் ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உடன டியாக ஏற்படுத்தி தரக்கோரி, வால் பாறை தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் அலுவலர்கள் (சிஐ டியு) சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும்  முகாம் ஞாயிறன்று கோவை வால் பாறை அரசு அரசு மேல்நிலைப்பள்ளி யில் சுகாதாரத் துறை அலுவலர் பாவா லட்சுமணன் தலைமையில் நடை பெற்றது. இரண்டு பிரிவுகளாக மாற் றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை புதியதாக பொறுப்பேற்றுள்ள கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து வால்பாறை அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை யும், அரசு மருத்துவமனையிலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை யும் ஆய்வு செய்தார். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ். சமீரனை சந்தித்து வால்பாறை தேயி லைத் தோட்டத் தொழிலாளர்கள் மற் றும் அலுவலர்கள்  சங்கத்தின் (சிஐ டியு) பொதுச்செயலாளர் பி.பரம சிவம் பல்வேறு கோரிக்கைகள் அடங் கிய மனுவை அளித்தார். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதா வது, வால்பாறை அரசு மருத்துவ மனையில் ரத்தவங்கி மற்றும் ஸ்கேன் வசதிகள், எக்ஸ்ரே பிரிவுகள் உரு வாக்க வேண்டும். ஏற்கனவே மருத்து வமனையின் தொடக்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ்ரே கருவிகள் செயலிழந்து இருக்கிறது. மேலும் எக்ஸ்ரே எடுக்கும் பணியார்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. உடனே மருத்துவக் காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். கடந்த காலத்தில் கோவை ஆட்சியராக இருந்த கு.இராசாமணி, ரூ.24 லட்சத் தில் அரசு மருத்துவமனைக்கான ஆம் புலன்ஸ் வாகனத்தினை வாங்க நடவ டிக்கை எடுத்தார்.

இந்நிலையில்  தற் போது அவர் பணியிடமாற்றம் செய் யப்பட்டுள்ளதால், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கிடைக்க வேண் டிய ஆம்புலன்ஸ் வசதி கிடப்பில் உள் ளது.  இதனால் இப்பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிர மத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் கூறப் பட்டுள்ளது.

;