districts

மிரண்டு ஓடியவர்களின் உரிமையை மீட்டு தந்தது செங்கொடி

தெருவோர வியாபாரிகளிடம் பொருட் களை பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டுவார்கள். பல நேரங்களில் காவல் நிலை யத்திற்கு இழுத்துச் சென்று அடித்து வழக்கும் போடுவார்கள். பொருட்களோடு இடுப்பில்  இருந்த பணமும் பறிபோகும். தெருவோரத்தில் துணியை விரித்து வியாபாரம் செய்து கொண்டி ருக்கும்போதே வியாபாரியின் கண்கள் அங்கு மிங்கும் அலைபாயும். காவல்துறையைப் பார்த் தால் திருடனைப் போல மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஆளுக்கு ஒரு மூலையாக ஓடுவார்கள்.  தெரு ஓரத்தில் வியாபாரம் செய்வது குற்றம். 50  ஆண்டுகளுக்கு முன் சென்னையின் அவல நிலை இது. இந்தக் கொடுமையை எதிர்த்து காவல்  நிலையத்திற்குள் நுழைந்து நியாயம் கேட்டு  போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். வியாபாரி களை திரட்டி நம்பிக்கையூட்டி சங்கமாக்கி போராடியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டு காவல்துறை அராஜகத்திற்கு தடை யாக மாறினர். வி.கல்யாண சுந்தரம், பி.என். கபூர், கே.எம்.ஹரிபட், வி.பி.சிந்தன், உ.ரா.வரத ராஜன் என கம்யூனிஸ்ட்  தொழிற்சங்கத் தலை வர்கள் தெருவோர வியாபாரிகளை பாது காத்தனர். 1980களில் உருவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த இளைஞர்களை திரட்டி  மாமுல் வசூல் செய்யும் ரவுடிகளை ஓடஓட  விரட்டியடித்ததோடு, காவல்துறை, மாநக ராட்சி அதிகாரிகளின் அராஜகத்திற்கும் முற் றுப்புள்ளி வைத்தது. இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்களின் தலை யீடு ஆட்சியாளர்களை அசைத்தது. 2004 ஆம் ஆண்டுதெருவோர வியாபாரிகள் கொள்கை  அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது.  மேற்குவங்கம், கேரள அரசுகள் உள்ளாட்சிக ளில் சட்டமியற்றி தெருவோர வியாபாரிகளை  பாதுகாத்தன. 2010ஆம் ஆண்டு தெருவோர  வியாபாரத்தை வாழ்வாதாரமாக இந்திய உச்ச நீதி மன்றம் அங்கீகரித்தது. மத்திய சட்டத்தை உருவாக்க ஒன்றிய அமைச்சகத்துக்கு உத்தர விட்டது. 

சட்டம் தெரியாத அதிகாரிகள்

இதன்படி ‘தெருவோர வியாபாரிகள் (வாழ் வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை  ஒழுங்குபடுத்துதல்) சட்டம்-2014’ வந்தது. இந்த  சட்டம் காவல்துறை, உள்ளாட்சி அதிகாரிகளின்  துன்புறுத்தலில் இருந்து தெருவேரா வியாபாரி களை பாதுகாக்க, வியாபார மண்டலங்களை  உருவாக்கி வியாபாரத்திற்கு இடம் ஒதுக்கித்  தர வேண்டும்,  வங்கிக் கடன் மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், இவற்றை செய்ய ஊராட்சி, நகராட்சி அளவில் ‘நகர விற்பனை குழுவை’அமைக்க வேண்டும் என் கிறது.  தமிழக அரசு 2015ஆம் ஆண்டு சட்ட விதி களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது.  2017 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மண்டல  வாரியாக நகர விற்பனை குழு அமைத்தது. இக்குழுகளை சட்டத்திற்கு உட்பட்டு முறையாக அமைக்காததால் சென்னை உயர்நீதி மன்றம் இந்தக் குழுக்களை கலைத்தது.  இந்தச் சட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரி கள், காவல் துறையினருக்கு எதுவும் தெரிய வில்லை. வியாபாரிகளை முழுமையாக கணக் கெடுத்து அனைவருக்கும் விற்பனை சான்றி தழ், அடையாள அட்டை வழங்கிய பின்னரே நகர விற்பனைக்குழு தேர்தல் நடத்த வேண்டும். வியா பாரிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய பின்பும்  மாநகராட்சி நிர்வாகம் இதை பொருட்படுத்த வில்லை. பொதுத் தேவைக்கு வியாபாரம் செய்யப் படும் இடம் தேவையென்றால், நகர விற்பனைக்  குழுவுக்குத்தான் அங்கு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அப்போது  கூட, மாற்று இடம் தராமல் அகற்ற முடியாது.  இதற்குமாறாக, அதிகாரிகளே முடிவெடுத்து  அகற்றுகின்றனர். சட்டத்தை மீறி புல்டோசர் மூலம் கடைகளை அகற்றுகின்றனர். இதற்கான சட்ட நடைமுறைகள்கூட தெரியாமல் அதிகாரி கள் இருப்பது கவலையளிக்கிறது. சட்டத்தின்படி குறைதீர்ப்பு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் ஒரு சிவில் நீதிபதி, இரு  தொழில் வல்லுனர்கள் இருக்க வேண்டும். இந்த  குழுவிடம் பாதிப்புக்கு உள்ளான வியாபாரி முறையீடு செய்து தீர்வை பெறுவார். சட்டம் அம லுக்கு வந்து 9 ஆண்டுகளாகியும் குறைதீர்ப்பு குழுவை மாநகராட்சி அமைக்கவில்லை.

அராஜகமாக அகற்றம்

தெருவோர வியாபாரிகள் உழைக்கும் மக்களுக்கு மிக மலிவான விலையில் அத்தி யாவசிய தேவைகளை கொண்டு சேர்க்கும் சமூக சேவகர்கள். சுயமாக சிறு முதலீட்டைக்  கொண்டு தொழில் நடத்துபவர்கள். இவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக அணுகக் கூடாது என  சட்டத்தில் தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மறைத்து அதிகாரிகள் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்றே சொல்கின்றனர். உழைக்கும்  மக்களை நகரை விட்டு அகற்றிவிட்டு இந்தியா  ஒளிர்கிறது,வளர்ச்சி என்கின்றனர். நீதிமன்றங் களும் பல நேரங்களில் இதை பிரதிபலிக் கின்றன. நாட்டின் குடிமகன் கண்ணியமாக ஒரு  தொழிலை செய்து வாழும் உரிமையை அரசி யல் சாசனம் வழங்கியிருந்தும் இதை ஏழைக ளுக்கு மறுப்பது ஏன்? தடையில்லா வர்த்தகம் என சில்லரை வணிகத்தில் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களை ஏழைக் குடிமக்களை மட்டும் விரட்டியடிப்பது ஏன்? -சி.திருவேட்டை மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சிஐடியு