districts

img

மூன்று தலைமுறையின் இருளை நீக்கிய செங்கொடி ஆழியார் பழங்குடியின மக்கள் நெகிழ்ச்சி

பொள்ளாச்சி, ஜன. 27- மூன்று தலைமுறையாக  இருளி லேயே வாழ்ந்த ஆழியார் பழங்குடி யின மக்களுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் போராட்டத் தின் பயனாக தற்போது மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வரு கிறது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆழியார் அணை. இத னருகே அமைந்துள்ள பழங்குடியின மக்களின் குடியிருப்பு பகுதிகளான அன்பு நகர், புளியங்கண்டி, சின்னார் பதி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டு காலமாக 200க்கும் மேற்பட்ட பழங் குடியின குடும்பங்கள் மின்சார வசதி யின்றி இருளிலேயே வசித்து வந்த னர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலை மையில் தங்களது பகுதிகளுக்கு மின்சா ரம், பாதுகாப்பான குடியிருப்பு, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து, அண்மையில் புளி யங்கண்டி பகுதியில் மின்சார வசதி மற்றும் நியாய விலைக்கடை ஏற்ப டுத்தி தரப்பட்டது. இதேபோல், சின் பார்பதி மலை கிராமத்தில் கடந்த ஆண்டு மின்சார வசதி செய்து தரப் பட்டது. இந்நிலையில், தற்போது அன்பு நகரிலும் முதற்கட்டமாக 5 வீடு களுக்கும், பின்னர் படிப்படியாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் தெரிவித்துள்ள னர்.

இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறியதா வது, ஆழியார் அன்பு நகர் பகுதி மலை வாழ் மக்களுக்கு மின்வசதி ஏற்ப டுத்தி கொடுத்த, தமிழக மின்சார துறை யினருக்கும், உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத் துத்துறை அரசு அலுவலர்களுக்கும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் உட னடியாக அரசு நிர்வாகம் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வ தாக தெரிவித்தார்.

;