districts

img

குழிகளை மூடாமல் மெத்தனம்: ஒப்பந்ததாரரை கடுமையாக எச்சரித்த மேயர்

திருப்பூர், ஆக.7- திருப்பூரில் வளர்ச்சி பணிகளுக்காக தோண்டிய பள்ளங்களை, பணி முடிந் ததும் மூடாமல் அலட்சியம் காட்டிய தனியார் ஒப்பந்த தாரருக்கு திருப்பூர் மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார் கடும் எச்சரிக்கை விடுத் தார். திருப்பூர் மாநகராட்சி குட்பட்ட குமார் நகர், வ.உ.சி  நகர், சாமுண்டிபுரம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் சாலை யின் இருபுறமும் நான்காவது திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாய் பதிக்க சாலையில் தோண்டப் பட்ட குழிகள் பணி முடிந்ததும், சீர் செய்யப் படாமல் சாலை முழுவதும் குண்டும், குழியு மாக இருந்தது. தொடர் மழையால், சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இதனால், இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் குழி மற்றும் சகதியில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் சகதியில் சிக்கி, போக்கு வரத்து பாதிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின் றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்  புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து  மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அப்பகுதி யில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப் போது, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் களை கடுமையாக எச்சரித்த அவர், சாலை யின் குழி தோண்டும் போது, பொது மக்கள் பாதிக்காத வகையில் குழியின் முன் தடுப்பு வைப்பதில்லை.

பணி குறித்த தகவல் பலகை வைப்பது இல்லை. சரியாக பணி செய்ய வில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டி வரும். ஒவ்வொரு பகுதியி லும், 500 மீட்டர் துாரத்துக்கு பணி செய்ய வேண்டும். பணி முடிந்ததும், சாலையை சீர் செய்து விட்டு, தொடர்ந்து, அடுத்து பணியை துவங்க வேண்டும். சீர் செய் யப்பட்ட சாலையை ரோலர் மூலம் சமன் செய்ய வேண்டும். ஆனால், ரோடு ரோல ரையே காணவில்லை. உங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என ஒப்பந்த தாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்தார். இதனை தொடர்ந்து உடனடியாக ரோடு  ரோலர், பொக்லைன் இயந்திரங்கள் வர வழைக்கப்பட்டு சாலையை செப்பனிடும் பணியில் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரி கள் ஈடுபட்டனர். முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்திலும் இப்பிரச்சனை குறித்து  மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப் பினர். வேலை செய்யும் இடங்களில் தகவல்  பலகை வைக்க வேண்டும். வேலை முடிந்த வுடன் உடனடியாக அந்த இடத்தை செப் பனிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மேயர் தினேஷ் குமார் உறுதி அளித்தி ருந்தார். எனினும் குமார் நகர் சாமுண்டிபுரம் சாலையில் பழைய நிலையை தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் வெள்ளியன்று திடீர் ஆய்வுக்காக வ.உ.சி. நகர் பகுதிக்கு  வந்த மேயர் தினேஷ்குமார் மேற்கண்ட வாறு தனியார் ஒப்பந்ததாரரை கடுமை யாக வசைப்பாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

;