சேலம், பிப்.14- சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், காதலர்க ளுக்கு புத்தகம் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர். உலகம் முழுவதும் வெள்ளி யன்று காதலர்கள் தினம் உற்சாக மாக கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், காதலர்கள் மற்றும் காதல் திருமணம் செய்த வர்களுக்கு, ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற புத்தகத்தை வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினர். ‘தமிழகத்தில் காதல் திருமணம் செய்து வருபவரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ் நிலை தமிழகத்தில் உள்ளது. சமூக மாற்றத்தை காதல் திருமணங்கள் செய்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், என வாலிபர் சங்கத்தி னர் தெரிவித்தனர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் பெரியசாமி, பொருளாளர் வெற்றிவேல், துணைத்தலைவர் திவ்யா, துணைச்செயலாளர் குரு பிரசன்னா, நிர்வாகிகள் பகத்சிங், கோபி, விமல்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பிரவீன் குமார், கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காதல் தம்பதிகளுக்கு பாராட்டு
காதலர் தினத்தை முன்னிட்டு, காதல் திருமணம் செய்த தம்பதிக ளுக்கு பாராட்டு விழா, தருமபுரி செங்கொடிபுரத்தில் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கேக் வெட்டி, காதல் தம் பதிகளுக்கு நினைவுபரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித் தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் ஆர்.சிசுபா லன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, நகரச் செயலா ளர் ஆர்.ஜோதிபாசு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, நிர்வாகிகள் கே.பூபதி, கே. சுசிலா, ராஜம்மாள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குரளரசன், நிர் வாகிகள் எஸ்.மணிகண்டன், பரணி, கார்த்திக் ஆகியோர் பங்கேற்ற னர். கோவை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அலுவலகத்தில் காதலர் தின விழா உற்சாகமாக கொண்டாடப் பட்டது. தபெதிக பொதுச்செயலா ளர் கு.ராமகிருட்டிணன் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் அண்மையில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட புது மணத் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள் கலந்து கொண்டு கேக் வெட்டி காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர். மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு வெள் ளியன்று மூன்று ஜோடிகள் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அன்பை விதைக்கவும் அனுமதி வேண்டுமாம்! கோவை மாநகர போலீசார் விநோதம்
காதலர் தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர், கோவை வ.உ.சி பூங்காவில், ‘அன்பை போற்றுவோம்’ என்கிற வாசகத்துடன் காதலர்களுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்தனர். இதனையேற்று ஐம்பதுக்கும் மேற் பட்ட வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் குழுமினர். இதனிடையே பூங்கா வளாகத்தில் காதலர் தினம் கொண்டாட போலீசார் அனுமதி மறுத்தனர். நாங்கள் இங்கே போராட வரவில்லை, அன்பை விதைக் கவே வந்துள்ளோம், இனிப்பை பகிர்ந்து கொள்ளக்கூட காவல்துறை யினரிடம் அனுமதி வாங்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர். அதெல்லாம் முடியாது என முடிவெடுத்தாற்போல போலீசாரும் முரண்டு பிடித்தனர். இதனால், போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தி னருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காதலர் தினம் கொண்டாட வந்த காதலர்களை கலைந்து போக செய்த போலீசார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.அர்ஜுன், பொரு ளாளர் தினேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகள் ஏ.என்.ராஜா, முத்து முருகன், தீனதயாளன், எம்.ஸ்ரீதர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வாலி பர் சங்க நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும், வாலிபர் சங்கத்தி னர் கொண்டு வந்திருந்த கேக்கினை பறிமுதல் செய்தனர். வாலிபர் சங்க நிர்வாகிகளுடன் போலீசார் நடத்திய வாக்குவாதத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அண்டா திருடர்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்கும் போலீஸ், அன்பை போற்றுவோம் என்றால் அனுமதி வாங்க வேண்டும் எனச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என வெளிப்படையாகவே விமர்சித்துச்சென்றனர்.