districts

மலை ரயில் கட்டணத்தை குறைக்கோரி போராட்டம்- கைது

உதகை, அக்.23- மலை ரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்கக்கோரி ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம்,  மேட்டுப்பாளையத் திலிருந்து குன்னூர் வழியாக உதகை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி காலை 7:45 மணிக்கு புறப்படும் மலை ரயிலில் குன்னூர் முதல் லவ்டேல் வரை உள்ள ரயில் நிலையங்களில் பள்ளி  மற்றும் கல்லூரி மாணவிகள், அரசு மற்றும்  தனியார் துறை ஊழியர்கள் அதிக அளவில் பயணம் செய்வது வழக்கம். கடந்த சில  ஆண்டுக்கு முன்பு வரை குன்னூர்- உதகை  இடையே பயணிக்க வரும் நபருக்கு முதல் வகுப்பு ரூ.75 இரண்டாம் வகுப்பு ரூ.10 என டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலை யில், தற்போது நபர் ஒருவருக்கு முதல்  வகுப்பு ரூ.350, இரண்டாம் வகுப்பு கட்ட ணம் ரூ.190 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்  பெற வேண்டியிருக்கிறது. இந்த கட்டண உயர்வால் தினசரி பய ணம் செய்யும் உள்ளூர் மக்கள், மலை ரயி லில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின் றனர். 240 இருக்கைகள் உள்ள பெட்டிக ளில் 10 பேர் மட்டுமே பயணம் செய்யும்  நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிக்கெட்  கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலி யுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் குன்னூரில் மலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப் போது அங்கு பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை  தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக் கும் இடையே பெரும் தள்ளு, முள்ளு  ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

;