districts

img

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை

கோவை, ஜூலை 27-      தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட் களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சி யர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு தொடர்பாக வணிக சங்க பிரதிநிதிகளுடனான ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தின்போது உணவு பாதுகாப்பு பிரிவு நிய மன அலுவலர் தமிழ்செல்வன், வட்டார போக் குவரத்து அலுவலர் (மத்தியம்) பாஸ்கரன், மாநகர நகர் நல அலுவலர்ராஜன், மாவட்ட ஆலோசகர் சரண்யா மற்றும் வணிக சங்க பிர திநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது, உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா, மெல் லும் புகையிலை போன்ற நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல் அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்லவும் கூடாது என தமிழக அரசால் அறிவிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் படி கோவை மாவட்டத்தில் உள்ள மாநில எல் லைகளில் அனைத்து வாகனங்களும், காவல் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு வருகின் றது. அத்தியாவசிய பொருட்களில் குட்கா பொருட்களை கடத்துபவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகை யிலைப் பொருள்களை விற்பனை செய்தல் கண்டறியப்பட்டால், அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொது மக்களுக்கு கேடும் தீங்கும் விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற் பனை செய்வோர் தொடர்பாக 9444042322 (வாட்ஸ்அப்)  எண்ணிற்கு புகார் தெரிவிக்க லாம். மேலும், புகையிலை, பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தண்டனைக் குரிய குற்றம் என்பதை உணர்த்துவதுடன் அனைத்து வியாபாரிகளும் விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் வணிகர் சங்கங் களின் பேரமைப்புகளின் சார்பில் புகையிலை, பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனைக் கெதிரான உறுதிமொழியினை அனைவரை யும் ஏற்க செய்ய வேண்டும். உணவுப் பாது காப்புத் துறையின் சார்பில் பள்ளி வளாகங் கள், கல்லூரி வளாகங்களுக்கு அருகாமை யில் உள்ள கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தவும், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பறக்கும் படை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றது என மாவட்ட ஆட்சியர்  டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரி வித்தார். முன்னதாக கோவை மாவட்டத்தில் புகை யிலை, பான் மசாலா, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த வணிக சங்க பிரதிநிதிகள்  மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

;