பொள்ளாச்சி, ஆக.28- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள இலங்கை வாழ் தமிழர்களின் குடியிருப்புகள் மிக வும் பழுதடைந்த நிலையில் உள் ளதால் புதிய குடியிருப்புகளை கட்டித் தர அரசு உதவிட வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமி ழர்கள் மனு அளித்தனர். இது குறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக் கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, பொள்ளாச்சி அடுத்த ஆழி யார் நகர் எல்.எப் காலனியில் சுமார் 30 இலங்கை வாழ் தமிழர்கள் குடும் பங்கள் வசித்து வருகிறோம். 30 வரு டங்களாக அங்கு வசித்து வரும் எங்களது வீடுகள் சிதிலமடைந்து அதனுடைய ஆயுட்காலம் முடிந்த நிலையில் உள்ளது. அந்த வீடு கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் வருவதும் தொடர்ந்து மழை பெய் தால் சுவர்கள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. அங்குள்ள வீடுகளில் பாம்புகள், பூரான், காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்கு கள் தொந்தரவு அதிகம் உள்ளது. அனைத்து வீடுகளிலும் சிறிய குழந்தைகள் உள்ளனர். ஆபத் தான சூழ்நிலையில் வசித்து வரும் எங்களின் நிலையை மறுவாழ்வு முகாமிற்கு வரும் அதிகாரிகளும் கண்டுள்ளனர். இவர்களிடம் எங் கள் கோரிக்கைகளை பலமுறை எடுத்துக் கூறியும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் கோட்டூர் பகுதி யில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது ஆனால், ஆழி யார் பகுதியில் வசித்து வரும் 30 குடும்பங்களுக்கு புதிய வீடு கிடைக்கவில்லை. இது சம்பந்த மாக பலமுறை விண்ணப்பம் அளித் தும் அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.