districts

img

துப்பாக்கி சுடும் போட்டி: பெண் காவலருக்கு முதல் பரிசு

நாமக்கல், ஜூலை 6- அகில இந்திய அளவிலான துப் பாக்கி சுடும் போட்டியில், நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீஸ் கீதா பங் கேற்று, 4 வகையான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஆயுதப்படை காவ லர் கீதாவை, நாமக்கல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.  அதில், டி.எஸ்.பி. ஆனந்தராஜ், ஆயுதப் படை டி.எஸ்.பி., இளங்கோவன், ஆய் வாளர் சக்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் 50 ஆவது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அள வில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு, ஒத்திவாக் கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிர பயிற்சி பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத் தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள, தமிழக அதி ரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி  மைதானத்தில், அகில இந்திய அளவி லான மகளிர் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி, 4 நாட்கள் நடந்தது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 30 அணிகளைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பங்கேற்ற னர்.