districts

img

ஊதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை, ஆக 18- ஊதியம் வழங்காததால் கோவை மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாநகரட்சி, மத்திய மண்டலம், 70. 82 மற்றும் வடக்கு மண்டலம், 3 ஆவது வார்டுகளில் ஒப் பந்த அடிப்படையில் தூய் மை பணியாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து  வருகிறது. இதனிடையே நடப்பு மாதம்  தொடங்கி 18 நாட்கள் ஆகியும், தூய்மை  பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப் படவில்லை. இதனால் ஆவேசமடைந்த தூய்மை பணியாளர்கள், வியாழனன்று பணிக்குச் செல்லாமல் அந்தந்த மண்டல  அலுவலகங்களில் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் பணத்தேவை அதிகரித்து குடும்பம் நடத்த சிரமம் ஏற்படு கிறது. எனவே, எங்களுக்கு முறையான ஊதி யத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சம்பள பட்டுவாடா செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர். தொடர்ந்து, 70 மற்றும் 82, 3 ஆவது வார்டில் உள்ள தொழி லாளர்களுக்கு உனடியாக ஊதியம் வழங் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;