districts

img

ஆழியார் கவி அருவியில் வெள்ள அபாயம்

பொள்ளாச்சி, மே 16- மேற்கு தொடர்ச்சி  மலைகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக ஆழியாறு கவி அருவியில் உள்ள இரும்பு கம்பி தடுப்பு கள்  வனத்துறையினரால்  அகற்றப்பட் டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து  வருகிறது. இதனால் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவி அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிக ரிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக, வனத்துறையிரால்  கவி அருவி பகுதி யில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு வசதியாக ரூ.10 லட்சம் செலவில்  இரும்புக் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற் போது மழை தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் விரைவில் கவி அருவியில் வெள்ளம் அதிகளவில் பெருக்கெடுத்து வரும் அபாயம் உள்ளது.

எனவே, வெள்ளத்தினால் இரும்புக்கம்பி தடுப்பு கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது என்ப தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வனத்துறையினர் தற்போது , கவி அருவி பகுதியில் இரும்புக்கம்பி தடுப் புகள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர் . தொடர் மழை காரணமாக தொடர்ந்து கவி அருவியில் தண்ணிர் ஆர்ப்பறித் துக் கொட்டி வருகிறது. இதனால் ஆழி யார் அணையில் தண்ணீர் மட்டம் வெகு வாக அதிகரித்து வருகிறது.

;