districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக ஓய்வூதியர் சங்க கோவை மாநாட்டில் தீர்மானம்

கோவை, ஆக.7- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கோவை மாநாடு வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க கோவை மாவட்ட 4 ஆவது மாநாடு சனியன்று (தாமஸ் கிளப்) எஸ்.சந்திரன்  நினைவரங்கத்தில் மாவட்ட தலைவர் வி. அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கே.அருணகிரி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் கே.ஜானகி அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு கோவை மாவட்ட தலைவர் கே.சின்னசாமி மாநாட்டை துவக்கி உரையாற் றினார். அறிக்கைகளை மாவட்ட செயலாளர் எஸ்.மதன், மாவட்ட பொருளாளர் பி.ந டராஜன் ஆகியோர் முன்வைத்தனர். மாவட்ட கருவூல அலுவலர் ஏ.எஸ்.செந்தில்குமார் சிறப்புரையாற்றினர். இதில், மாநில துணைத் தலைவர் பி.ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க (பொ) மாவட்ட தலைவர் எஸ்.ஜெகநாதன், தபால் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மண் டல செயலாளர் எஸ்.கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்து ணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், வன காவலர்கள், பஞ்சாயத்து செயலாளர் கள், ஊரக நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதி யம் பெறும் அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.  70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு  நிதியை உயர்த்தாமல், சந்தா தொகையை  உயர்த்தியது ஏற்புடையதல்ல. எனவே,  குடும்ப பாதுகாப்பு நிதியை ரூபாய் ஒரு லட்ச மாக உயர்த்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் உடனடியாக கலந்து பேசி குறைபாடுகளற்ற உண்மையான காசில்லா மருத்துவக் காப்பீடு திட்டத்தை  உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்களை  கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் கோவை  மாவட்ட தலைவராக என்.ரங்கநாதன்,  மாவட்ட செயலாளராக எஸ்.மதன், மாவட்ட பொருளாளர் பி.நடராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் 3 பேர், மாவட்ட இணைச்செய லாளர்கள் 4 பேர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை யாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

;