districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்குக

சேலம், ஆக 18- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சேலம்  மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைகளுக்கான நல சங் கத்தின் சேலம் மாவட்ட 4-ஆவது மாநாடு சேலம் தெய்வீகம் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் எஸ். அம்மாசி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட குழு உறுப்பினர் பி.பாரதி முன் மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.கனகராஜ் வர வேற்புரையாற்றினார்

. மாநாட்டை  மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி துவக்கி வைத்தார்.  மாவட்ட செயலாளர் வி.கே. வெங்க டாசலம் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பி. ஹரி கிருஷ்ணன் வரவு-செலவு அறிக் கையும் சமர்ப்பித்தனர்.  மாநாட்டில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.மாடசாமி, மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஐ. ஞானசௌந்தரி, வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் திவ்யா  உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இதில் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித் தொகையை  உயர்த்தி வழங்கிட வேண்டும். அரசு  வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டும். 100 நாள்  வேலையில் மாற்றுத்திறனாளி களுக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை தரப்பட வேண்டும்.  40 சதவிகிதம் ஊனமுள்ளவர் களுக்கு மாத உதவித் தொகை யாக ரூ.5000 வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன்  நிறைவுறையாற்றினார். முடிவில், எஸ்.சுமதி நன்றி கூறினார்.  மாநாட்டில், மாவட்ட தலைவ ராக ஹரிகிருஷ்ணன், செயலா ளராக எம்.குணசேகரன், பொரு ளாளராக எம்.கனகராஜ், துணைத்  தலைவர்களாக வி.கே. வெங்க டாசலம், அம்மாசி, துணை செய லாளர்களாக அமலா ராணி, உமா  காந்த், கந்தன், பத்மினி, உள்ளிட்ட  25 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. 

;