districts

சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை

பொள்ளாச்சி, மே 12- பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற் றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர் வழியாக பிற மாவட்டம் மற்றும் கேரள மாநிலப் பகுதிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி றது. இதனால் நகரில் அடிக் கடி போக்குவரத்து பாதிக் கப்படுகிறது. இதில், உடு மலை சாலை மரப்பேட்டை யிலிருந்து தேர்நிலை வழி யாக பேருந்து நிலையம், நியூஸ்கீம் சாலை, காந்தி சிலை, பல்லடம் சாலை உள் ளிட்ட குறிப்பிட்ட பகுதி வரை யிலும் நான்கு வழித்தடமாக சாலை விரிவாக்கப் பணி 5 மாதத்திற்கு முன்பு துவங்கப் பட்டது. தற்போது இப்பணி சுமார் 70 சதவிகிதம் நிறை வடைந்துள்ளதாக கூறப்படு கிறது. சாலை விரிவாக்கம் செய்யப்படும் முக்கிய சந் திப்பு பகுதிகளில் ரவுண்டான சிறு பூங்கா அமைக்கும் பணியும் நடக்கிறது.

இதில், பாலக்கோடு சாலை, பேருந்து நிலையம் அருகே மற்றும் கோவை சாலை, நியூஸ்கீம் சந்திப்பில் காந்தி சிலை அருகேயும் ரவுண் டானா அமைக்கும் பணி அண் மையில் துவங்கப்பட்டது. இதில், கோவை சாலை, நியூஸ்கீம் சாலை சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைப்பதற்காக, சுமார் 50  ஆண்டுகளுக்கு மேலாக அமர்ந்த நிலையில் இருந்த காந்தி சிலை திங்களன்று அப்புறப்படுத்தப்பட்டது. முன்னதாக, பீடத்தில் இருந்த சிலையை ராட்சத கிரேனில் பெல்ட் அமைத்து தூக்கி செல்லப்பட்டது.

சில மணி நேரத்த்தில் அதனை அருகே உள்ள தாலுகா அலு வலக வளாகத்தின் ஒரு பகுதி யில் பாதுகாப்புடன் வைக்கப் பட்டது. கோவை சாலை, நியூஸ்கீம் சாலை, பாலக் காடு சாலை சந்திக்கும் பகுதி யில் ஒரு மாதத்திற்குள் ரவுண்டானா அமைக்கப் பட்டவுடன், இதன் நடுவே காந்தி சிலை அமைக்கப் படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

;