districts

திருப்பூர்: நியாய விலைக் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருள் வழங்க மறுப்பு?

திருப்பூர், அக்.23- திருப்பூர் மாநகரில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வெளியூர் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளும், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு விட்டன. கடை களில் பொருள் வாங்குவதற்கு இந்த ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து பில் போடப் படுகிறது. இந்த தொழில்நுட்ப முறை நடை முறைக்கு வந்த நிலையில் தமிழகத்தின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மாநிலத்தின் வேறெந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறி வித்தது. பின்னலாடை தொழில் நகரமான திருப்பூ ரில் லட்சக்கணக்கில் பிற மாவட்டத் தொழிலா ளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த  முறை வந்த பிறகு, திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடைகளில் வெளியூர் கார்டுதாரர் கள் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை ஏற் பட்டது.  எனினும் இந்த வாய்ப்பை பயன்படுத்த வெளியூர் கார்டுதாரர்கள் கடைகளுக்குச் சென்றால் அங்கு ஸ்கேன் செய்ய முடிய வில்லை என்று பல நியாயவிலைக் கடை களில் அவர்களுக்குப் பொருள் வழங்காமல் திரும்ப அனுப்பிவிடுகின்றனர். வெளியூர் கார்டுதாரர்களும் தங்கள் கார்டில் இங்கு பொருள் வாங்க முடியாத நிலை பற்றி கேள்வி கேட்காமல் திரும்பிச் சென்று விடுகின்றனர். இது குறித்து நியாய விலைக் கடை பணி யாளர்களிடம் கேட்டபோது, அனைத்து கடை களிலும் இது போன்ற நிலை இல்லை. சில கடைகளில் மட்டுமே விற்பனையாளர்கள் இதுபோல் செயல்படுவதாக தெரிகிறது. ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தில் சில கோளாறுகள் ஏற்படுவதாலும் இதுபோல் தவிர்க்கக்கூடும். எனினும் இது போல் நடை பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனை வருக்கும் பொருள் வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

;