districts

img

தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

பள்ளிபாளையம், மே 15- வெப்படை அருகே பயணி களை ஏற்றி செல்லாமல் இயக்கப் பட்ட தனியார் பேருந்தை அப்பகுதி  பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தை அடுத்துள்ள வெப் படையில் ஏராளமான நூற்பாலை களும், பல்வேறு விதமான சிறு, குறு  தொழில் நிறுவனங்களும் செயல் பட்டு வருகின்றன. பல்வேறு  தேவைகளுக்காக வெப்படையி லிருந்து ஈரோடு, சேலம் ஆகிய  பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்றுவரும் நிலையில், சேலத் திலிருந்து ஈரோடு செல்லும் தனி யார் பேருந்துகளில் வெப்படையில் உள்ள பயணிகளை, பேருந்து நடத்துநர்கள் ஏற்றுவதில்லை என  கூறப்படுகிறது. அப்படி அவர் களை பேருந்தில் ஏற்றினாலும், இருக்கைகள் கொடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக தெரிகிறது. கடந்த சில மாதங்க ளாகவே இந்த பிரச்சனை இருந்து  வருவதாக கூறப்படும் நிலையில், ஞாயிறன்று மாலை சேலம் பேருந்து நிலையத்திலிருந்து தனி யார் பேருந்தில் ஏறிய வெப் படையைச் சேர்ந்த பஞ்சாலைத்  தொழிலாளி ஒருவர், வெப் படைக்கு செல்ல வேண்டும் என கூறி பயணச்சீட்டு கேட்டுள்ளார்.

அதற்கு, “வெப்படையில் பேருந்து  நிற்காது” என ஓட்டுநரும், நடத்து நரும் கூறியுள்ளனர். பஞ்சாலைத் தொழிலாளி, “ஏன் நிற்காது” என  ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால்,  அவர்கள் பஞ்சாலை தொழிலா ளியை திட்டி, கீழே இறக்கி விட் டனர். இதுகுறித்து வெப்படையில் உள்ள தனது உறவினர்களிடம் பஞ்சாலை தொழிலாளி தகவல் தெரிவித்தார். அப்போது ஈரோட்டி லிருந்து வெப்படை வழியே சேலம்  செல்லவிருந்த தனியார் பேருந்தை வெப்படை நால்ரோடு பகுதியில்  தொழிலாளியின் உறவினர்கள்  மற்றும் அப்பகுதி பொதுமக்கள்  சிறைபிடித்தனர். இதனையறிந்த  போலீசார் இருதரப்பினரையும்  காவல் நிலையத்திற்கு அழைத்துச்  சென்று, தனியார் பேருந்துகள்  உரிய முறையில் பயணிகளை  ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்  என தனியார் பேருந்து உரிமை யாளரிடம் தெரிவித்தனர். இதை யடுத்து இனிவரும் காலங்களில்  பேருந்தை முறையாக இயக்குவ தாக உறுதியளிக்கப்பட்டதை யடுத்து போராட்டம் கைவிடப் பட்டது. தனியார் பேருந்து விடுவிக் கப்பட்டது. இதற்கிடையே, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், வெப்படை வழித்தடத்தில் செல் லும் வாகனங்களை முறையாக இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.