districts

img

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கோவை புதிய மாநகராட்சி ஆணையர் பேட்டி

கோவை, ஜூன் 14-

கொரோனா தொற்று கட்டுப்படுத்து தல், பொது சுகாதாரம், சாலை வசதி, மக்கள் குறைதீர்ப்பு ஆகியவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.என புதி தாக பதவியேற்ற மாநகராட்சி ஆணை யர் ராஜகோபால் சுன்கரா பேட்டியளிக் கையில் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின் 26வது  ஆணையாளராக ராஜகோபால் சுன்கரா திங்களன்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதற்கு முன்பு  தான் கூடுதல் ஆட்சியராகவும், தொழில்துறை துணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தி லேயே இரண்டாவது பெரிய மாநகராட்சி  கோவை எனவும், இங்கு என்னை பணியமர்த்திய தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சி அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறி னார்.  கொரோனா தொற்று இரண்டாவது அலையில் இருப்பதாகவும் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஐந் நூறுக்கும் அதிகமானோர் தொற் றால் பாதிக்கப்படுகின்றனர் என தெரி வித்தார். முதல் அலையின் போது கட லூரில் பணியாற்றியதாகவும் இரண் டாவது அலையின் போது சென்னையில் பணியாற்றியதாக தெரிவித்த அவர் மூன்றாம் அலை தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்கும் நடவடிக்கைகள் தற்போது இருந்தே எடுக்கப்படும் என கூறினார்.  

இரண்டாவது முக்கிய விஷய மாக சுகாதாரம், சாலை வசதி, தெரு  விளக்கு, உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித் தார். மூன்றாவது விஷயமாக பொது மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகை யில் சென்னையை போல ட்விட்டர், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங் கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என்றார். தனது தந்தை இறந்த போது இறப்பு சான்றிதல் பெறுவதில் இருந்த சிரமங்களை நினைவு கூர்ந்த  அவர் பொதுமக்கள் யாரும் அலை களிக்கப்பட கூடாது எனவும், குறைகள் தீர்க்கப்படாவிட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித் தார்.

கொரோனா விதிமுறைகளை பின் பற்றாத கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீட்டில் தனி மைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவை யான உதவிகள் சென்னை மாந கராட்சியில் உள்ளது போல போகஸ் வாலண்ட்ரியர்கள் மூலம் வழங்கப் படும் என்றார். தொற்று பாதித்தவர் களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண் டார்.

;