உடுமலை, ஆக.9- உடுமலை மற்றும் பழ னிக்கு செல்லும் தேசிய நெடுச்சாலை பகுதிகளில் தொடர் விபத்துகள் ஏற்படு வதை தடுக்கம் வகையில் பாலங்கள் கட்ட வேண்டும் என ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்க ரியிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் கோரிக்கை வைத்து உள்ளார். பொள்ளாச்சி நாடளுமன்ற தொகுதிக் குட்பட்ட உடுமலை - பழனி சாலையில் பாலம் பட்டி கிராமத்தின் அருகே தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகை யில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைக்க வேண்டும். மேலும் மடத்துக்கு ளம் தாலுகா வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும். பொள் ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுத சுரபி உணவகம் முதல் மரப் பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர் வீஸ் ரோடு இடையில் போக் குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாடாளுமன் றத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் கே.ஈஸ்வரசாமி முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, வியாழனன்று ஒன்றிய நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியி டம் பொது மக்களின் நலனை கருதி சாலை பிரச்சனைகளை எடுத்துரைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.