districts

img

மனுதர்ம சமுதாயத்தில் பெரியாரின் மனித தர்மம் வெற்றி பெற்றது

தஞ்சாவூர் ஏப்.27-தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 31 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலைபெரியார் அறிவு மையம் முத்தமிழ்அரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் செ.வேலுச்சாமி வரவேற்றார்.ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். கல்விப்புலமுதன்மையர் பி.கே.ஸ்ரீவித்யா ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் பல்கலைக்கழக வேந்தர்கி.வீரமணி பேசுகையில், “இந்த இடம்மேடு பள்ளம் நிறைந்த இடம். இப்போதுசமவெளியானது. விண்வெளி எப்படிதெரியாதோ, அப்படித் தான் இந்த மண் வழியும் கூட, ஏன் நமது சமுதாயமும் பெரியார் வருகைக்கு முன்அப்படித் தான் இருந்தது. ஆண்- பெண்பாகுபாடு, படித்தவர்- படிக்காதவர் வேறுபாடு, ஒருவரை ஒருவர் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, நெருங்கக் கூடாது என்பதிலிருந்து அனைவரும் சமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் பெரியார். 

எவ்வளவு தான் கூட்டங்கள் இருந்தாலும் சில நேரங்களில் அது ஊனமாகிவிடும். பெண்களுக்கும் கூட சூத்திரர்போன்று கல்வி கொடுக்கக் கூடாது என்றுகூறிய மனுதர்ம சமுதாயத்தில் பெரியாரின் மனித தர்மம் வெற்றி பெற்றது. அதன் விளைவு தான் இவ்வளவு பெரிய கல்விக்கூடமாக வளர்ச்சி அடைந்து வெற்றி பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் லட்சிய சொற்களே சிந்தியுங்கள், புத்தாக் கத்தை உருவாக்குங்கள், சமுதாய மாற்றத்தை உருவாக்கி காட்டுங்கள் என்பது தான். நம்மால் முடியாதது எவராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்”. இவ்வாறு கி.வீரமணி பேசினார். 

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “இப்பல்கலைக்கழக மாணவிகள்செயற்கைகோள் தயாரித்து விண்ணில் செலுத்தியுள்ளனர். மாணவிகள் எத்தகைய சாதனைகளையும் செய்யமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டானமுன்னுதாரண நிகழ்வு தான் இது.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொன்ன இந்த நாட்டில்பெண்களின் சாதனை சிறப்புக்குரியதாகும்” என்றார். நிறைவாக பதிவாளர் சொ.ஆ.தனராஜ் நன்றி கூறினார். விழாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், அலுவலர் களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் மோகனா வீரமணி, பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குனர் டாக்டர் குன்னூர் கௌதமன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மல்லிகா,துணை முதல்வர் பர்வீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



;