districts

img

புராதன கோவிலை பாதுகாக்க மக்கள் கோரிக்கை

உடுமலை, ஆக 7- உடுமலை அருகில்  மக்கள் வாழ்க்கை முறை களை நினைவுபடுத்தும் புராதன கோவிலை பாது காக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகேயுள்ள கோட்ட மங்கலம் கிராமத்தில் நூறு  ஆண்டுகளுக்கு பாரம்பரியமான வல்லக் கொண்ட நாதசுவாமி கோவில் உள்ளது.   இக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலும்  அதன் அருகில் சுமார் ஐம்பது சென்ட் இடத்தில் மக்கள் வாழ்க்கையை குறித்த   வீரக்கல் சிலை வடிவில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் பரமரிப்புக்காக சுமார் 90 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இக்கோவில் கொழுமம் தாண்டவேஸ்ரர்  திருக்கோவில் அறநிலையத்துறையின் கட்டு பாட்டில் உள்ளது.  தற்போது கோவில் முறையாக பரமரிப்பு  இன்றி சிதலமடைந்து காணப்படுகிறது.  மேலும்,சிலைகளை சேதப்படுத்தப்பட் டுள்ளது. இந்த வீரக்கல்லில் இப்பகுதியில் வாழ்ந்த நாயக்கர் வாழ்வியல் முறைகளை யும், போர், விவசாயம், ஆட்சி முறைகளை   சிலையாக வடித்து சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் வீரக்கல் அமைத்துவுள்ளது. மேலும் பெண்களுக்கு போர் பயிற்சி மற்றும் ஆட்சிகளில் முக்கிய பங்குகள் குறித்த சிலைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மக்கள் கூறியதாவது,  இக் கோவில் நாயக்கர்கள் ஆட்சி கட்டப்பட்டது.  கோவில் மற்றும் அவர்களின் ஆட்சி முறை  வீரக்கல்களை பாதுகாக்க கோவில் நிலத்தில்  வரும் வருமான இருந்தால் போதும் ஆனால்  அறநிலைய துறை அதிகாரிகள் யாரும் கண்டு  கொள்வதில்லை. கோவில் நிலத்தை மிகவும் குறைந்த மதிப்பிலான குத்தகையாக பெற்றுக்கொண்டு வருகிறார்கள். இந்த கோவிலை புணர்மைத்து சுற்றியும் வேலி அமைக்க வேண்டும் என்றனர்.  மக்கள் வாழ்வியல் முறைகளை இன்றைய தலைமுறையும் அறியும் வகை யில் இது போன்ற புராதன கோவில் மற்றும்  நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்  என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை யாக உள்ளது.

;