தருமபுரி, ஜூலை 27- மேட்டூர் அணைக்கு நிலம் கொடுத்த ஏமனூர் பகுதி மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறை தீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தலைமையில், ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், துணைத்தலைவர் கே.என்.மல்லை யன், துணைச்செயலாளர்கள் ஆ. ஜீவானந்தம், அன்பு, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் என்.பி.முருகன், ஏம னூர் ஊர் தலைவர் கோவிந்தன் ஆகி யோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினர். இதன்பின் சோ.அருர் சுணன் பேசுகையில், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏமானூர் கிரா மத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வரு கின்றனர். அங்கு விவசாயம் செய் தும், அருகில் உள்ள ஆற்றில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்ற னர். 1924 ஆம் ஆண்டு ஆங்கிலே யர் அரசாங்கம், காவிரியாற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டுவ தற்கு நிலத்தை வழங்கிவிட்டு மேடான பகுதியான ஏமானூரில் வந்து குடியேறியவர்களாவர். இப் பகுதியில் நிலத்தை சீர்செய்து பட்டா வழங்குவதாக அப்போ தைய ஆங்கிலேய அரசு தெரிவித் தது. சுதந்திர போராட்டத்தின் கார ணமாக பட்டா வழங்கவில்லை. நாடு சுதந்திரமடைந்தப்பிறகு, பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனிடையே, இக் கிராம மக்களுக்கு குடும்ப அட்டை, மின் இணைப்பு, பள்ளி, மருத்துவ மனை, தார்சாலை போன்ற வசதி கள் செய்து கொடுக்கப்பட்டன. இதனிடையே, இக்கிராம மக்க ளுக்கு 1997 ஆம் ஆண்டு 317 பேருக்கு வழங்கப்பட்ட நத்தம் பட்டா செல் லாது என தெரிவிக்கப்பட்டது. தற் போது இக்கிராமத்தைச் சேர்ந்த மக் களுக்கு 68 தொகுப்பு வீடுகள் ஒதுக் கப்பட்டன. ஆனால், பட்டா இல்லை என்பதால் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடுகட்ட அனுமதி வழங் கவில்லை. எனவே, இம்மக்க ளுக்கு உடனடியாக மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொகுப்பு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதற்கு பதில ளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுபணித்துறை அலு வலர்கள் அக்கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து பட்டா கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உத் தரவிட்டார். இதைத்தொடந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் மழைக்காலங்களில் உபரிநீர் பெருக் கெடுத்து வீணாக கடலில் கலக்கி றது. இந்த உபரிநீரை தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பி னால் விவசாயம் மேம்படும். எனவே, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிக ளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. குறிப்பாக, காய்ந்த கரும்புகளுக் கான இழப்பீடு வழங்கப்பட வில்லை. எனவே, அந்த தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையில் மானிய விலையில் டிராக்டர் கேட்டு விண் ணப்பித்தவர்களுக்கு எந்த காரண மும் சொல்லாமல் நிராகரிக்கப்பட் டுள்ளது. உரிய பதிலளித்து தகுதி யுள்ளவர்களுக்கு மானிய விலை யில் டிராக்டர் வழங்க வேண்டும், என்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பி ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, தருமபுரி மாவட்ட கூட்டு றவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) ரவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமி நாதன், வேளாண்மை இணை இயக் குநர் (பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) மலர்விழி, அரசுத்துறை அலு வலர்கள், விவசாய சங்க பிரதிநிதி கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.