districts

img

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

சேலம், ஜூன் 13- உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலப் பொதுச்செய லாளர் சி.ராமலிங்கம் எழுதிய, ‘வானியல் பால பாடம்’  என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் கருப்பூர் கிளை சார்பில், மாமாங்கத்தில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கருப்பூர் கிளைச் செயலாளர் தீபிகா நூலை வெளியிட, கொங்குநாடு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில்   கணினி அறிவியல் துறையின் பேராசிரியர் கார்த்திகா, அறிவியல் இயக்கத்தின் கிளைப் பொருளாளர் வாசுகி மற்றும் கல்லூரி போராசிரியர்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.