districts

img

“தீக்கதிர் செய்தி எதிரொலி” புராதன கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலை, ஆக.9- மக்கள் வாழ்வியல்  நினைவு சின்னங்கள் கொண்ட வல் லக்கொண்ட நாதசுவாமி புராதன கோவிலை புணர்மைக்க வேண்டுமென திங்களன்று தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளி யிட்டது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக  கோவிலில்  ஆய்வு மேற் கொண்டனர்.  திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கோட்டமங்க லம் கிராமத்தில் பல நூறு ஆண்டு புராதன வல்லக்கொண்ட நாதசுவாமி கோவில் உள்ளது.  கொழுமம் தாண்டவேஸ்ரர்  திருக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள் ளது. இக்கோவிலை முறையாக பரமரிப்பு இல்லாததால் சிதல மடைந்து காணப்படுகிறது. மேலும் வீரக்கல் சிலைகளை  சேத மடைந்து உள்ளது.  இந்நிலையில், திங்களன்று தொல்லியல்துறை மற்றும் பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழு நேரடி கள ஆய்வு செய்தனர். இக்குழு தரும் அறிக்கையின் படி கொழுமம் கரிய வரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்ல கொண்டம்மன் கோவில்களை புதிப்பிக்க அரசு அனுமதி யின்படி திட்ட மதிப்பு செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.

;